Saturday, September 24, 2011

கடவுச்சீட்டு விண்ணப்பிக்க போகிறவர்களின் கவனத்திற்கு......


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


இன்றைய காலத்தில் பாஸ்போர்ட் கடவுச்சீட்டு இன்றியமையாத பொருளாகவிட்டது. புனித ஹஜ்ஜீக்கு செல்வதற்குக் கூட பாஸ்போர்ட் அவசியம்.
அல்லாஹ் ஹஜ் செல்லக்கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன். மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுற்றுலா செல்வதற்கும் பாஸ்போர்ட் மிக மிக அவசியம். 
படித்துகொண்டிருக்கும் போதே பாஸ்போர்ட் அப்ளை செய்துகொண்டால் மிக மிக நல்லது.
பின்னாளில் அலைச்சல் குறையும்.புதிய பாஸ்போர்ட் அல்லது ரினிவல் பண்ணப் போகிறவர்களுக்கு எனக்குதெரிந்த சில   விஷயங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்துக்கொள்வதன் மூலம் அவர்கள் அடிக்கடி பாஸ்போர்ட் அலுவலகம் செல்லவேண்டியதில்லை என்ற நல்ல நோக்கத்தில் எழுதுகிறேன்.

முதலில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து விடுங்கள் அதற்கான லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.


http://passport.gov.in/pms/OnlineRegistration.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன்
Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்வு செய்து கொள்ளவும்.அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி கொள்ளவும்.
District: உங்களது மாவட்டதை தேர்வு செய்து கொள்ளவும்.
Service Desired: எந்த விதமான பாஸ்போர்ட் புதிய பாஸ்போர்ட்டா அல்லது ரினிவலா என்பதை தெரிவு செய்துகொள்ளவும்.
Surname: உங்களது இன்சியல் (பொதுவாக வாப்பாவோட பேரு அல்லது கல்யாணாம் ஆன பெண்ணாக இருந்தால் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்துகொள்ளவும்.
Previous Name: உங்களது முன்பு இருந்த பெயரை எழுதிக்கொள்ளவும்.
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருஷம்  (DD MM YYYY) குறிப்பிடவும்.
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் பெயரையும்
வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டின் பெயரையும் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: உங்களது தொழில்
Visible Mark: உங்கள் உடம்பில் தெரியும் ஏதாவது அடையாளம் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய குடியிருப்பு முகவரி
Permanent Address: நிரந்தரமான குடியிருப்பு முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய குடியிருப்பு முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை தெரிவிக்கவும்.
Phone No: வீட்டு தொலைபேசி எண்
Mobile No : கைத்தொலைபேசி எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: வாப்பா (தகப்பனார்) பெயர்
Mother's Name: உம்மா (தாயார்) பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருஷமாக வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும்
From: To: Address 1 : என்னும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்பப்பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
 DD No, DD Date, Bank Name தகவலை பூர்த்தி செய்துகொள்ளவும்.
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட்(கடவுசீட்டு) இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் வழங்கிய தேதி
Place of Issue: பழைய பாஸ்போர்ட் வழங்கப்பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (பழைய பாஸ்போர்ட் கடைசி பக்கத்தில் பார்த்து பூர்த்தி செய்துகொள்ளலாம்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் இறுதி(முடிவு) நாள்
சிகப்பு கலரில்லதை கண்டிப்பாக எழுதவும்.
மெரூன் கலரில்லதை தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்.
அனைத்தையும் ஒன்றுக்கு இருமுறை பார்த்து  அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்துவிட்டோம் என்று உறுதி செய்துகொண்டு, "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸிக்கு அடுத்து செல்லவேண்டிய  (availability date and time) நேரம் தேதியை காட்டும்,நாம் அதில் நமக்கு தேவையான நாளை,நேரத்தை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் SAVE செய்து,மறக்காமல் பிரிண்ட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடத்தில் போட்டோவை ஒட்டவும்.  அதில் எதையும் மாற்றம் செய்யதுவிட வேண்டாம்.
முகவரி சான்றிதழ் (ஏதாவது இரண்டு) :
    * ரேசன் கார்டு
    * குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
    * வாக்காளர் அடையாள அட்டை
    * வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
    * துணைவியின் (மனைவின்) பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதழ் (ஏதாவது ஒன்று)_:
    * 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
    * பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
    * கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு  சான்றிதழ்கள் :
    * 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
    * உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
    * பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கண்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் (நகல்)ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.  குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டாது.நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் மறக்காமல் நன்றாய் சாப்பிட்டுவிட்டு செல்லவும்.
மேலும்  கூடிய விரைவில் பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். மேலதிக தகவல்களுக்கு
 அடுத்து வாகன ஒட்டுநர் உரிம்ம் லைசென்ஸ் எவ்வாறு விண்ணப்பிக்கும் முறை பற்றி உங்களை சந்திக்கிறேன்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

2 comments:

  1. Assalaamu Alaikkum / Varah,
    Thanks fr your valuable information it will helpful very much to fresh passport applicants,
    Hearty wishes
    M.H.Mhammed Rafi
    8678954755

    ReplyDelete